Tips for Astrology prediction and to believe in Astro predictions.

Tips for Astrology prediction and to believe in Astro predictions.


1. An astrologer is not the CREATOR of this world.

2. Astrology never fails, astrologer may fail often. 

3. When bad comes to you NO ONE can stop it & when a GOOD comes to you NO ONE CAN BLOCK it.

4. Astrology is a analysis of planetary position. Its not an assurance for your life.

5. God had given everything when he made you to born in this earth planet. He done his job well. I do not know why you are always looking over the sky for LUCK. God given all inside you. Search within you.

6. When a person is in trouble or when a person is in poverty he comes to astrologer. If he is rich enough or trouble free, whether he will try to discuss about his chart with an astro? 

7. When we loose our confidence and braveness, GOD WILL BE VISIBLE TO OUR EYES. During such time only we are thinking about GOD. So when we loose our confidence in a particular matter, we are going to astro people. 

8. They are also (astro) human beings. They cannot determinate your life. They can say GOOD AND BAD. Making your life GOOD is in your hands and involvement of life. 

9. Even a matter of 2 minutes change in birth time will give a completely wrong prediction. 

10. 80% of people do not know their exact birth time as per GMT. All are 2 or 3 minutes + or -. So the prediction will also become + or -.

So believing astrology or believing your self is up to you


Yahoo ID: tamilastrology@yahoo.com




1. ஜோதிடர் என்பவர் இந்த உலகத்தை படைத்தவர் அல்ல.

2. ஜோதிடர் கூற்று பொய்க்கலாம் ஆனால் ஜோதிடம் என்றும் பொய்ததில்லை.

3. உங்களுக்கு நடக்கப்போகும் நல்லவிசயங்களை இந்த உலகத்தில் யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அதே நேரம் உங்களுக்கு நடக்க போகும் கெட்ட நிகழ்வுகளில் இருந்தும் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

4. ஜோதிடம் என்பது ஒரு வாழ்கை வரைபட அலசல் மட்டுமே அதை வைத்துக்கொண்டு இந்த இடம்தான் நீங்கள் போக உள்ளீர்கள் என்று உறுதி சொல்லமுடியாது. சுருக்கமாய் சொன்னால் ஜோதிடம் என்பது உங்கள் வாழ்கை வரைபடம் ஆனால் அது உங்கள் வாழ்கை உத்திரவாதம் ஆக முடியாது.

5. கடவுள் உங்களை இந்த பூமி என்ற கோளில் உங்களை படைத்து அனுப்பியபோது உங்களுக்கு எல்லா சக்திகளையும் கொடுத்து அனுப்பியுள்ளார். இதன் மூலம் வரது கடமையை சிறப்பாக செய்து விட்டார். ஆனால் மனிதனாகிய நாம் மட்டும் நமது கடமைகளை செய்ய இயலாமல் கடவுள் காப்பாற்றுவார் என்று வானத்தையே பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். நமது வாழ்கையை நமது கையில் எடுத்துக்கொள்ள சொல்லி நம்மை இந்த பூமிக்கு கடவுள் அனுப்பினார். வேறு கிரஹத்திற்கு நம்மை அனுப்பி இருந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பர்க்கவும்.

6. ஒருவன் வறுமையில் இருந்தாலோ அல்லது பிரச்சனைகளோடு இருந்தால் மட்டுமே ஜோதிடரை தேடுகிறான். கடவுளையும் தேடுகிறான். ஒரு பணக்கார வர்கத்தவரோ அல்லது தொல்லை இல்லாத மனிதர்களோ ஜோதிடரை தேடுவாரோ?

7. நமக்கு ஆண்டவன் எப்போது கண்ணுக்கு தெரிவார் என்றால். நாம் முழுவதுமாக தைரியத்தை இழந்து நிற்கும்போது தான். நமது தைரியத்தை எப்போது இழக்கிறோமோ அப்போது ஜோதிடர் கடவுள் போல தெரிவார். என் எனில் உங்கள் கஷ்டத்தினை உங்களுக்கு தீர்க்க தெரியவில்லை என்பதால் அதனை தீர்த்துவைக்க முயல்பவர் உங்களுக்கு கடவுள் போல் தெரிவார்.

6. ஜோதிடரும் ஒரு சாமானிய மனிதரே. அவருக்கும் இன்பம் துன்பம் இரண்டும் உண்டு. நல்ல ஜோதிடர் உங்கள் கஷ்டங்கள் போக நல்ல பாதையால் உங்கள் ஜாதகம் என்ற வரைபடம் மூலம் ஆலோசனை சொல்கிறார். அதுவே இறுதியான முடிவாக இருக்கும் என்ற கட்டாயம் இல்லை.- ஒரு மனிதரால் இன்னொரு மனிதனின் வாழ்வை நிர்ணயம் செய்ய முடியாது.

8. பிறந்த நேரத்தின் இரண்டு நிமிட வித்யாசம் கூட முற்றிலும் மாறுபட்ட பலன்களை ஜோதிடரை சொல்லவைக்கும்.

9. உலகில் பிறந்த முக்கால் பங்கு மக்களுக்கு கிரீன் விட்ச் நேரப்படி துல்லியமான நேரம் கணித்து சொன்னவரில்லை. ஆகையால் ஜோதிடன் உங்களை படைத்தவர் அல்ல . அவர் ஒரு நல்ல வழிகாட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆக ஜோதிடரையோ ஜோதிடத்தினையோ நம்புவது உங்கள் பொறுப்புதானே.


1 comment: