ஜோதிடம் என்பது ஒரு மாபெரும் அறிவியல் கணித துறை . இதில் முழுமை பெற்றவர்கள் எவரும் இல்லை. அவரவர் கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பரிட்சித்து பார்க்கவும், கணிதப்படி நிகழ்வுகள் நடந்தால் தமது எதிர்காலத்தினை எவ்வாறு நடத்திக்கொள்ளலாம் என்ற மார்க்கம் தெரியும் என்ற முயற்சியோடு ஜோதிடத்தினை கையில் எடுக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஜோதிடர் ஒரு மனிதனின் இறப்பு நாளைக்கூட துல்லியமாக கணக்கிட்டு சொல்லக்கூடிய தகுதி பெற்றிருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். அதற்க்கு தெய்வ அனுகூலமோ அல்லது நமக்கு புலப்படாத சக்தி ( May be Paranormal Psychology ) அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது .
ஆனால் தற்போது ஜோதிடத்துறை வியாபாரம் ஆகிவிட்டது. கலிகாலம் அல்லவா. ஜோதிடரும் வாழ்கையை நடத்தவேண்டும் அல்லவா. அதில் சில தொழில் தர்மங்களும் சிலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தனது வேலை வெட்டி இல்லாத நேரங்களை இலவச ஜோதிட ஆலோசனைகள் சொல்லி பிறருருக்கு உபகாரமாகவோ, உபத்திரமாகவோ சேவை செய்கிறார்கள். புகழுக்காகவும் சிலர் இந்த சேவைகளை செய்வதுண்டு. இயல்பாக தாம் கற்றுக்கொண்டதை பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், பிறருக்கு ஜோதிடம் பற்றிய நல்ல விஷயங்களை சொல்லி மூட நம்பிக்கையை அகற்ற முயற்சிப்பவர்கள் வெகு சில மக்களே. அதிலும் குறிப்பாக மிக வயதானவர்கள் மட்டுமே இன்னும் அப்படிப்பட்ட முயற்சிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்கள்.
ஒரு நல்ல ஜோதிடர் ஒருவருக்கு அழகு என்னவென்றால் தவிர்க்கவே முடியாத சூழ்நிலை தவிர மற்ற நேரங்களில் ஒரு ஜாதகருக்கு நல்ல மனோபலத்தை உண்டு பன்னுபவராகவும், தன்னம்பிக்கையை வளர்பவராகவும் தான் இருக்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் பேராசையும், வறுமையும், தான் என்ற மமதையும் பல ஜோதிடர்களை பணம் பறிக்கும் கயவர்களாக மாற்றி வருகிறது. எங்கோ ஒருசிலர் மட்டும் நியாய தர்மத்திற்கு கட்டுப்படும், தனக்குமேல் எதோ ஒரு சக்தி தம்மை ஆண்டு வருகிறது என்ற உண்மையை புரிந்துகொண்டு ஜோதிட துறையை காப்பாற்றி வருகிறார்கள் .
இங்கு ஜோதிட அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வலை தளம் உபயோகமாக இருக்கும். இருப்பினும், சாமானியர்கள் எளிதில் புரிந்துகொள்ள படக்காட்சி மற்றும் விளக்க உரைகள் மூலம் அடிப்படை விஷயங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படும்.
பொதுவாக ஜோதிடர்கள் ஒரு ஜாதகம் பார்க்கும்போதுஅதிகமாக பேசக்கூடிய வார்த்தைகள்:
நட்சத்திரம்
நம் பிறக்கும் போது எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம் என்பது நாம் பிறந்த தினத்தை வைத்து முடிவு செய்ய படுகிறது. அதேபோல் நாம் பிறந்த தினத்தில் எந்த எந்த நட்சத்திரத்தில் எந்த எந்த கிரகங்கள் இருந்தது என்பதையும் பலனுக்காக எடுத்துகொள்வது.
லக்னம்
சூரிய உதயம் கொண்டு கணிக்கப்படுவது லக்னம் ஆகும், இதற்க்கு உயிர் ஸ்தானம் என்றும் பெயர். இதனை முதல் இடமாக வைத்துக்கொண்டு மற்ற கிரகங்கள் எங்கு எங்கு உள்ளதோ அதற்கேற்றார் போல் பலன் சொல்ல உதவும்.
ராசி
இது சந்திரன் கொண்டு கணக்கிடுவது ஆகும். மேற்கூறிய லக்னம் பலமற்று இருந்தால் இந்த ராசியை கொண்டு ஜாதகத்தினை ஆராய்வர். விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான். விதி என்றால் லக்னம், மதி என்றால் சந்திரன். விதி இல்லை என்றால் மதியால் வெல்லலாம் என்பர். மதி என்பது வளர்பிறை தேய்பிறை கொண்டது. அதாவது நமது மனித மனம் போல் நிலையில்லாமல் இருப்பது.
அம்சம்
பாவம்
திசை
அந்திரம்
புக்தி
யோகம்
தோஷம்
ஆட்சி
உச்சம்
நட்பு
பகை
நீச்சம்
வர்கோதமம்
அஷ்டவர்க்கம்
மேலும் எழுதுவது தொடரும்.
Yahoo ID: tamilastrology
பித்ரு தோஷம் என்றால் என்ன?
ReplyDeleteநம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது
21 தலைமுறைக்கு கயா,காசி யில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்
A.SUBRAMANIAM.JOTHIDA VALLUNAR
MOBILE-9910738463/96505720/011-27307584